எட்டையபுரம்: அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பொது மக்களின் அடிப்படை வசதி பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும், பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கவும், கொசுக்கடி மற்றும் சுகாதார சீர்கேடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும் மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவை பணிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் பொது மக்களை திரட்டி அதிமுக சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி