கடந்த 03.03.2025 அன்று எட்டயபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலநம்பிபுரம் பகுதியில் தாய் மகளாகிய இருவரையும் கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தப்பிஓடி தலைமறைவாகிருந்த குற்றவாளிகளை தொழில்நுட்ப ரீதியாகவும், இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு விரைவாக கைது செய்து தங்க நகைகளை மீட்டு துரிதமாக செயல்பட்ட தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் விளாத்திகுளம் அசோகன், கோவில்பட்டி ஜெகநாதன், மணியாச்சி குரு வெங்கடராஜ், ஸ்ரீவைகுண்டம் ராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்கள் ஆனந்தி கலாலெட்சுமி, தனிவிரல் ரேகை பிரிவு ஆய்வாளர் மற்றும் 20 காவல் ஆய்வாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கும், கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 காவல்துறையினருக்கும் என மொத்தம் 89 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.