தூத்துக்குடி: டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வாக்குவாதம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளில் மாநாட்டுக்குச் சென்ற திமுகவினர் பெருமளவில் கூடினர். இதனால் மேலவாசல் மற்றும் கோவில்பட்டி மெயின் ரோடு பகுதிகளில் இரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். கூட்டம் அதிகரித்ததால், வழக்கமாக இரவு 10 மணிக்கு மூடப்படும் கடைகள் 15 நிமிடம் முன்பே மூடப்பட்டன. இதனால் வரிசையில் காத்திருந்த கட்சியினருக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி