வ. உ. சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு

தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகத்தில் இந்தியாவின் முதல் மேம்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, RF, ரேடார் மற்றும் ஜாமிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 5 கி.மீ. தூரம் வரை அனுமதியில்லா ட்ரோன்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. இது கடலோர மற்றும் துறைமுக பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாகும். மூன்று மாதங்களில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவுள்ளது. இது ‘அம்ரித் கால் விஷன் 2047’ மற்றும் ‘கடல்சார் இந்தியா 2030’ இலக்குகளை அடைவதற்கு உதவும்.

தொடர்புடைய செய்தி