விளாத்திகுளத்தில் பழனிச்சாமி பரபரப்பான பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுகவின் பொது செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளுக்காக இழப்பீடு தொகையாக 400 கோடி ரூபாய் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அம்மா இருக்கின்றபோதும் அம்மா மறைவுக்குப் பின்பும் விவசாயிகளுக்கு நன்மை செய்த ஒரே அரசு அதிமுக அரசு. 

துருவாரப்பட்ட வண்டல் மண் விவசாயிகளுக்கு விலை இல்லாமல் கொடுத்தோம்.இப்படிப்பட்டகொடுத்தோம். இப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். இந்த அரசாங்கம் தேவையா? நாம் தண்ணீர் நம்பி தானே இருக்கிறோம். விவசாயிக்கு உயிர்நாடி தண்ணீர் தானே. நமக்கு உயிர்நாடியாக இருப்பது தண்ணீர் போன்று விவசாயிக்கு உயிர்நாடி கருப்பு தண்ணீர் தான். தண்ணீர் நம்பி தானே இருக்கிறோம். விவசாயி, விவசாய தொழிலாளி ஏற்றம் பெற வேண்டும் அது அண்ணா திமுக ஆட்சியில் தான் நடைபெறும் வேறு எந்த ஆட்சியிலும் நடக்காது என்றார்.

தொடர்புடைய செய்தி