தூத்துக்குடி சகாயபுரத்தைச் சேர்ந்த 22 வயதான ஜெமிலா, திருமணமாகி இரண்டு ஆண்டுகளிலேயே கணவர் பெனோ மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவமதிப்பு, கணவரின் ஆன்லைன் ரம்மி அடிமை, நகை அடகு வைத்து கடன் தீர்த்தல், வீட்டில் இருந்து வெளியேற சொல்லிய தகராறு உள்ளிட்ட காரணங்களால் ஜெமிலா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.