தூத்துக்குடியில் கார் விபத்தில் மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். செல்போன் பயன்படுத்தியவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றவர்கள் என பலரை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். மேலும், அதிவேகத்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர்.