தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று பூங்காக்கள் இருந்த நிலையில், தற்போது 53 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு என்று ஏற்கனவே ஒரு பூங்கா உள்ள நிலையில், மேலும் மூன்று பூங்காக்கள் பெண்கள் மட்டும் பயன்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலம் முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.