சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை.. தூத்துக்குடி வாலிபர் கைது

பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானதால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று (மே 23) நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி