தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாக கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது துறைமுக வரலாற்றில் இதுவரை கையாளப்பட்ட மிக அதிகமான இறக்கைகள் ஆகும். முந்தைய சாதனையாக 22 ஆகஸ்ட் 2025 அன்று 101 இறக்கைகள் கையாளப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டு (2025–26) அக்டோபர் மாதம் வரை மொத்தம் 2,300 இறக்கைகள் கையாளப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 61% அதிகம். சீனாவின் கின்சோவ் துறைமுகத்திலிருந்து எம். வி. ஜி. எச். டி. மரினாஸ் கப்பல் மூலம் வந்த இந்த இறக்கைகள், துறைமுகத்தின் கூடுதல் தளம்–IIல் இரண்டு மொபைல் கிரேன்கள் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டன. பணிகளை என். டி. சி. லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டது. 89.5 மீட்டர் நீளமுள்ள பெரிய இறக்கைகள் கையாளப்பட்ட இந்த சாதனை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளுக்கு முக்கிய ஆதரவாகும் என வ. உ. சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தா புரோஹித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி