இந்நிலையில், சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரிடையே பேசியதில் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில், செண்பகவள்ளியின் குடும்பத்துக்கு காரின் உரிமையாளரும், காப்பீட்டு நிறுவனமும் ரூ. 3.10 கோடி வழங்குமாறு முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். வசந்தி முன்னிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த உரிமையியல் நீதிபதியுமான கலையரசி ரீனா, ஓய்வுபெற்ற நீதிபதி முத்துராஜ், மூத்த பட்டியல் வழக்கறிஞர் யூஜியானா உள்ளிட்டோர் உடனிருந்தனர். செண்பகவள்ளி தரப்பில் வழக்கறிஞர்கள் இளையராஜா, காப்பீட்டு நிறுவனம் தரப்பில் ஆண்ட்ரூ மணி ஆகியோர் ஆஜராகினர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்