மழைக்காலம் முடிந்த பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும்: மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மழைநீர் தேக்கம் மற்றும் சாலைகளில் மாடுகள் திரிவது குறித்து ஆணையர் பிரியங்கா முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், "வடக்கு மண்டலத்தில் இதுவரை 838 மனுக்கள் பெறப்பட்டு 835 மணிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கத்தை அகற்ற அதிக திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், காலி மனைகளில் தேங்கியுள்ள தண்ணீரை உரிமையாளர்கள் அகற்ற வேண்டும். சாலைகளில் திரியும் மாடுகள் கோசலையில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மாடுகள் சாலையில் திரியவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும். ஜனவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி