தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் பெய்த பலத்த மழை காரணமாக தென்பாகம் காவல் நிலையத்திற்குள் புகுந்த மழை நீர் குளம் போல் காணப்பட்டது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் சுமார் 4 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் காவல் நிலையத்தில் மழைநீர் காவல் நிலைய வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்பட்டதுடன் காவல் நிலையத்திற்குள்ளேயும் தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகளை மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.