தூத்துக்குடி: டாஸ்மாக் கடையில் போராட்டம்; பிஜேபி கட்சியினர் கைது

தூத்துக்குடி திமுக அரசு டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் முன்பு தமிழக முதல்வரின் புகைப்படத்தை ஒட்டி வருகின்றனர். இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் தூத்துக்குடி சத்திரம் தெருவில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி பொது செயலாளர் மற்றும் மகளிர் அணி மண்டல துணைத் தலைவர் லட்சுமி வேல்கனி மற்றும் ஆன்மீக பிரிவு ஓம் பிரபு ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய 'ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி' என்ற வாசகத்துடன் தமிழக முதல்வர் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் 'அப்பா அழைக்கிறார் விதவைகளை உருவாக்கி விட' என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படங்களை ஒட்டினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த வட பாகம் காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி நிர்வாகிகளான லதா மற்றும் லட்சுமி வேல்கனி, ஓம் பிரபு ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி