உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு உரிய பதில் அளித்துவிட்டபோதும் தனது சுய அரசியல் ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும் மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனம். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பின்னிருந்த அதிமுக பிரமுகர்களை காப்பாற்றவும், அதிமுக இளைஞரணியின் பொள்ளாச்சி நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருளானந்தத்தை காப்பாற்றவும் பாதிக்கப்பட்ட பெண்களையே அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை தமிழக மக்கள் என்றும் மறக்கவே மாட்டார்கள்.
அதுமட்டுமா, உதவி கேட்டு வந்த பெண்ணை "மெயின் ரோட்டிற்கு வா" என முன்னாள் அதிமுக அமைச்சரே பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த அசிங்கமும் அதிமுக ஆட்சியில்தானே அரங்கேறியது என கடுமையாக குற்றம் சாட்டினர்.