தூத்துக்குடி: பிளாஸ்டிக் இல்லாத துறைமுகம்: அறிவிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பிளாஸ்டிக் இல்லாத துறைமுகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை செயல்முறைகளுக்கான துறைமுகத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை 'பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்' என்னும் கருப்பொருளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் மற்றும் கொச்சின் துறைமுக ஆணையத் தலைவர் பி.காசி விஸ்வநாதன், இருவரும் இணைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், தலைமை கண்காணிப்பு அதிகாரி, 

மற்றும் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் வ.உ.சிதம்பரனார் ஆணையத்தை 'நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத மண்டலம்' என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார்கள். மின்கல சேமிப்பு அமைப்பை செயல்படுத்தும் திட்டம் தீவிர பரீசிலனையில் உள்ளது. 6 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் பசுமை மெத்தனால் சேமிப்பு வசதிக்கான ஒப்பந்தத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி