ஆனால் மக்களுக்காக பணியாற்றும் கட்சி திமுக மாநகர பகுதியில் 90 சதவீதம் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. அதிலும் சிறிய பொிய என புதிதாக 2000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கும் இபி காலனியில் பணி நடைபெறுகிறது. விரைவில் நிறைவுபெறும். நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் திமுகவிற்கு ஓட்டுமொத்தமாக ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் பணியை தொடர்ந்து செய்வது தான் எங்களது கடமையாகும் முதலமைச்சரும் அப்படி தான் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். பணி செய்யாதவர்கள் பதவியில் இருக்க முடியாது. பல கட்சிகள் போட்டியிட்டும் கனிமொழி எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் கட்சி பணியையும் சிறப்பாக செய்தவர்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். தொடர்ந்து எல்லோரும் மக்கள் பணியாற்றுவோம் என்று பேசினார்.