செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.