துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ. உ. சி. துறைமுகம்; ஏஐ அமர்வு!

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், இந்தியாவில் முதன்முறையாக 'AI-Powered Ports' என்ற சிறப்பு அமர்வை நடத்தியது. துறைமுகங்களை வெறும் தானியக்க மையங்களாக அல்லாமல், 'Thinking Ports' ஆக மாற்றி, செயல்திறனை உயர்த்துதல், முன்கூட்டியே பராமரிப்பு செய்தல் மற்றும் சரக்கு இயக்கத்தை வேகப்படுத்துதல் ஆகியவற்றில் AI-யின் அவசியத்தை இந்த அமர்வு வலியுறுத்தியது. பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் கௌரவ் வல்லப், துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் உள்ளிட்ட நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். இது இந்திய துறைமுகங்களை புத்திசாலித்தனமான பொருளாதார மையங்களாக மாற்றும் தேசிய அளவிலான முயற்சியாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி