தூத்துக்குடி: நடப்போம் நலம் பெறுவோம் விழிப்புணர்வு நடைபயிற்சி

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அருகிலிருந்து இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 'நடப்போம் நலம் பெறுவோம்' (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் நடைபெற்ற 8 கிலோ மீட்டர் நடப்போம் நலம் பெறுவோம் விழிப்புணர்வு நடைபயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், கொடியசைத்து தொடங்கி வைத்து, நடைபயிற்சி மேற்கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், மாவட்ட சுகாதார அலுவலர் (தூத்துக்குடி) மரு. யாழினி அவர்கள், மருத்துவர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி