தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து, தற்போது மாநகரப் பகுதி முழுவதும் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.