தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசுகையில், "கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் யாரும் இல்லாமல் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்" என்று கூறினார். இந்தக் கூட்டம் திமுகவின் எதிர்கால வியூகங்கள் குறித்து விவாதித்தது.