அவரை மகாராஜன் மனைவி நேசமணி சென்று பார்க்கவில்லையாம். இதனால் நேற்று இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனையடைந்த மகாராஜன் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மகாராஜனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி