தூத்துக்குடி: ஏற்றுமதி சரக்குகளை கொண்டு செல்வதில் முறைகேடு என புகார்

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியாகும் சரக்குகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் இறக்குமதியாளர் பகுதி வரை கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு வரி விலக்கு பெற்று திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு பெட்டகங்களில் உள்ள சரக்குகளை அங்கே இறக்கி வைத்த பின் அதே சரக்கு பெட்டகத்தில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்றுமதி சரக்குகளை எந்தவித அனுமதியும் பெறாமல் ஏற்றி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருகின்றனர். 

வரி விலக்கு பெற்ற சரக்கு பெட்டகத்தில் மீண்டும் சரக்குகளை ஏற்றி கொண்டு வருவதன் காரணமாக சுங்க இலாக்காவிற்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி ஏற்றுமதி சரக்குகளுக்கு காப்பீடு போன்றவை கிடைக்காமல் போகிறது. இவ்வாறு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 சரக்கு பெட்டகங்களில் முறையற்ற வகையில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி வருவதால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. 

இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று தூத்துக்குடி சுங்க இலாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். சுங்கத்துறை ஆணையர் இணை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி