இறைதூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆகும். ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் தவ்ஹீத் ஜமாத் தொழுகை திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆண் பெண் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலகம் முழுவதும் அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டியும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவர் ஆறத்தழுவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர். இதில் ஒரு பகுதியை ஏழைகளுக்குத் தர்மம் செய்கின்றனர்.