மீன்பிடி படகுகள் வருடாந்திர கள ஆய்வு: ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளுக்கு வருடாந்திர களஆய்வு 26.05.2026 அன்று நடைபெறும். நாட்டுப்படகுகளுக்கு 05.06.2026 அன்று களஆய்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். களஆய்வில் பங்கேற்காத படகுகளுக்கு மானிய எரியெண்ணெய் நிறுத்தப்படுவதுடன், பதிவு சான்றிதழும் ரத்து செய்யப்படும். ஆய்வு நாளன்று காலை 6 மணிக்குள் அனைத்து படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி