தூத்துக்குடி: அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்தும் விதமாக மாணவ/மாணவிகள் கலந்து கொண்ட மிதிவண்டிப் போட்டியினை தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி, இன்று (04.01.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 160 பேர்கள் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ என தனித்தனியாக மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி