தூத்துக்குடி: ரயிலில் அடிபட்டு 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளம் மாநகரின் நடுவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி-மேலூர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்துகொண்டு இருந்தன. அப்போது தண்டவாளத்தில் சிக்கிய 4 ஆடுகள் மீது ரயில் மோதியது. இதில் 3 ஆடுகள் உடல் துண்டாகித் தூக்கிவீசப்பட்டு இறந்தன. ஒரு ஆடு காலில் காயத்துடன் தப்பியது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி