திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி, பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். கோயில் நிர்வாகம் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி