உடன்குடி அனல் மின் நிலையம் – சோதனை ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் அதிகபட்சமாக 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ரூ. 13,077 கோடி மதிப்பில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சோதனையின் போது பாய்லர் இயக்கப்பட்டு மின் வலையமைப்புடன் இணைக்கப்பட்ட நிலையில், சில சிறிய தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டதால் முதல் அலகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவை சரிசெய்யப்பட்ட பிறகு மீண்டும் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி