தூத்துக்குடி தூய்மைப் பணியாளர் சுடலை மாடன் தற்கொலை வழக்கில், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆயிஷா கல்லாசி தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2023ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் சுடலை மாடன் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆயிஷா கல்லாசி உள்ளிட்டோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.