திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய் மற்றும் புதன்கிழமை கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது. கோயில் தக்கார் ரா. அருள்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்பணியில், ரூ. 4,97,70,918 ரொக்கம், 1,071 கிராம் தங்கம், 31,811 கிராம் வெள்ளி, 2,40,880 கிராம் பித்தளை, 27,240 கிராம் செம்பு மற்றும் 1,296 வெளிநாட்டு கரன்சிகள் கண்டெடுக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி