திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. பணமோசடி வழக்கு ஒன்றில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஏற்கனவே, இதே சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரியும் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.