இதில் சமுதாய கொடிகள் மற்றும் சமுதாய அடையாள உடைகள் அணிந்த சிலர் கம்பு, கட்டைகளுடன் தாக்கிக்கொண்டனர். இந்த வீடியோ காட்சி வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த மோதலில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் திருமலைக்கொலுந்துபுரம், மேலப்பாட்டம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மகேஷ், பேச்சிமுத்து, ஆறுமுகக்கனி, சூர்யா, சுடலை உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், சமுதாய பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவுசெய்து குலசேரன்பட்டிணம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும்
வீடியோ காட்சியின் ஆதாரத்தின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் , இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது மிக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.