திருச்செந்தூா் திருக்கோயில் பணிகள்: அமைச்சர் பெருமிதம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அமைச்சா் பி. கே. சேகா்பாபு  சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா், திருக்கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணியில், ஹெச்சிஎல் நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ள 20 பணிகளில் 3 பணிகள் முடிந்து திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

ராஜகோபுர பணிகள் விரைவுபடுத்தப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. ஜன. 20ஆம் தேதி ஏழு கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற இருக்கிறது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் படி 122 பக்தா்கள் தங்கும் அறைகள் கட்டப்பட இருக்கின்றன. மேலும் ஏ, பி பிரிவில் 56 பக்தா்கள் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
 
வரும் 2025 ஜூலை 7 ஆம் தேதி திருக்கோயில் குடமுழுக்கு நடத்துவது என தீா்மானிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முதலாக தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தோன்றிய பிறகு 2022ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இப்பணிகள் முழுவீச்சில் சிறப்போடும், தரத்தோடும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவேறும் போது முதல்வா் மு. க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ஓா் அடையாளமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணிகள் இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புடைய செய்தி