திருச்செந்தூர் கோவில் தலபுராணம் வெளியீட்டு விழா!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில், வென்றி மாலைக் கவிராயர் அருளிச்செய்த திருச்செந்தூர் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட்டார். செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம் இந்நூலைப் பெற்றுக்கொண்டார். சென்னை சேக்கிழார் மையம் சிவாலயம் ஜெ. மோகனால் பதிப்பிக்கப்பட்ட இந்நூலை அவரும் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். மதுரை குமார் மெஸ் உரிமையாளர் மற்றும் சென்னை தொழிலதிபர் துரை தயாகர் ஆகியோரும் கலந்துகொண்டு ஆசி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி