அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யானை தெய்வானைக்கு துண்டி, வேஷ்டி, மாலை அணிவித்து புண்ணியானம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆய்வாளர் அர்னால்டு, கால்நடை உதவி மருத்துவர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 1 மாதத்திற்குப் பிறகு யானையை மீண்டும் நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. குமரன் விடுதி அமைந்துள்ள இடத்தில் சுமார் 500 மீட்டர் தூரம் கொண்ட பாதையில் மூன்று முறை தெய்வானை யானை வலம் வந்தது. அப்போது அங்கு நின்ற பக்தர்கள் தெய்வானைக்கு அரோகரா அரோகரா அரோகரா என்று கோஷம் எழுப்பினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்