திருச்செந்தூரில் கடல் 100 அடி உள்வாங்கியதால் பரபரப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு உள்ள கடல், பௌர்ணமி தினமான இன்று சுமார் 100 அடி உள்வாங்கி காணப்படுகிறது. இதனால், கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதால், பக்தர்கள் அதன் மீது நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே கடல் அவ்வப்போது சீற்றத்துடனும் உள்வாங்கியும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி