திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நேற்று பவுர்ணமி தினத்தை ஒட்டி கடல் சுமார் 60 அடி உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இன்று 2-வது நாளாக நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளம் வரை கரையில் இருந்து கடல் 80 அடி உள்வாங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் குளிக்க சிரமம் அடைந்துள்ளனர்.