மாணவர் தலைவர், துணைத் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் மாணவ, மாணவிகள் தங்களைப் பற்றி காலை கூட்டு வழிபாட்டுக் கூட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் எடுத்துக் கூறி தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
மாணவர்களே தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றினர். தேர்தலை பள்ளி ஆலோசகர் உஷாகணேஷ், பள்ளி நிர்வாக அதிகாரி வி.மதன், முதல்வர் இ.ஸ்டீபன் பாலாசீர் ஆகியோர் முன்னிலையில் நடத்தினர். 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
இதில் சிபிஎஸ்இ பிரிவுக்கு 12ஆம் வகுப்பு மாணவர் எம்.குஷாந்த், மெட்ரிக் பிரிவுக்கு இ.எம். யஷ்வந்த் ஆகியோர் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்பாடுகளைத் தேர்தல் கல்விக்குழுப் பொறுப்பு ஆசிரியர் ஜெ.ஆறுமுகசாமி மேற்பார்வையில் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.