70 வயது பூர்த்தியான51 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் விழா

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தபடி, 70 வயது பூர்த்தியான தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றது. இதில் 51 தம்பதியர்கள் கலந்துகொண்டு மாலை மாற்றிக் கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, சேலை, மஞ்சள், பூ, மாலை, மஞ்சள் கயிறு, வெற்றிலை, பாக்கு, பழங்கள் அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல் மரியாதை செய்து சுவாமி தரிசனம் செய்யவும், அறுசுவை விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தம்பதியர்களின் உறவினர்கள், பேரக்குழந்தைகள் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்றனர். இணை ஆணையர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி