ஐயா வைகுண்டர் தினம் நள்ளிரவில் எஸ்பி மதன் ஆய்வு

திருச்செந்தூரில் 194வது அவதார தின விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் நள்ளிரவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். இன்று நடைபெறும் விழாவையொட்டி, திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆண், பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆய்வின்போது அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் எஸ்.பி. வழங்கினார்.

தொடர்புடைய செய்தி