தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், வீட்டில் வளர்த்து வந்த 3 ஆடுகளை திருடிச் சென்ற மாட்டு கந்தன் மற்றும் நாகராஜா ஆகிய இருவரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர். பொன்ராஜ் மனைவி புஷ்பக்கனி என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றவாளிகள் இருவரும் உடன்குடி பகுதியை சேர்ந்தவர்கள்.