தூத்துக்குடி: சசிகலா சொத்து பறிமுதல்… அருகிலுள்ள நிலம் சர்ச்சை

சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராமங்களில், சசிகலா தொடர்புடையதாகக் கூறப்படும் நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது, அருகிலிருந்த பொதுமக்களின் தனியார் நிலங்களும் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்த முயன்ற நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சரிசெய்வதாக உறுதி அளித்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி