குலசை கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 60 லட்சம் வருவாய்

தசரா திருவிழாவிற்குப் பெயர் பெற்ற முத்தாரம்மன் கோவிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் செயல் அலுவலரும், துணை ஆணையருமான கோமதி முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ. 60 லட்சத்து 32 ஆயிரத்து 419, 87 கிராம் தங்கம் மற்றும் 850.600 கிராம் வெள்ளி கண்டெடுக்கப்பட்டது. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி