நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதனையொட்டி, தாய் மாமன் என்ற முறையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மேளதாளங்களுடன் சீர் எடுத்து வந்துள்ளார். சீமான் தனது வீட்டின் வெளியே வந்து அனிதா ராதா கிருஷ்ணனை வரவேற்று அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.