PCR வழக்குக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பொய் PCR வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று (05.11.2025) மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் ரெ. காமராசு நாடார், பொய் வழக்குகளுக்கு எதிராக அனைத்து சமுதாயங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். வருகிற 20.11.2025 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்செந்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி