திருச்செந்தூர் கோவிலில் ரீல்ஸ் சர்ச்சை: தடையை மீறி குழு நடனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், தடையை மீறி 6 பேர் கொண்ட குழு சினிமா பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட சம்பவம் பக்தர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் புனித சூழலை கெடுக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் நடப்பதாகவும், எச்சரிக்கை பலகைகள் இருந்தும் மீறி செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. புறக்காவல் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வில் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி