இதைமுன்னிட்டு இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் செயல்படும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் பக்தர்களுக்கு பொது விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இணை ஆணையாளர் அன்புமணி கலந்துகொண்டு பக்தர்களுக்கு பொது விருந்தை தொடங்கி வைத்தார். இதில் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.
சாத்தான்குளம் ஆய்வாளர் முத்து மாரியம்மாள், அயல் பணியாளர் வெங்கடேஸ்வரி, மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், குலசை அலாவுதீன், கோவில் கணக்கர் டெமிட்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.