தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் பட்டுஇசக்கி (36). பெயிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள டீக்கடையில் நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏன் இங்கு கூட்டமாக நிற்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலை பார்த்துவிட்டு கூலி வாங்குவதற்காக நின்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அபராதம் விதிக்க முயன்றுள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், நின்றுகொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு எப்படி அபராதம் விதிப்பீர்கள்? என கேள்வி கேட்டுள்ளனர். இதில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.